Fமம்தா தமிழகம் வருகை ரத்து

public

கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.41 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வாராக்கடன் பெற்றவர்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டுமெனக் கூறியுள்ளார்.

2014 ஏப்ரல் முதல் 2017 செப்டம்பர் மாதம் வரை, பொதுத்துறை வங்கிகளில் 2.41 லட்சம் கோடி வாராக்கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, நேற்று முன்தினம் (ஏப்ரல் 3) மத்திய இணையமைச்சர் சிவபிரசாத் சுக்லா எழுத்துமூலமாக விளக்கமளித்தார். அதில், ”வங்கிகளின் வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கப்பட்டாலும், கடன் வாங்கியவர்கள் இந்த தொகையைச் செலுத்தியாக வேண்டும். இது தள்ளுபடி அல்ல” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வரவு செலவுக் கணக்கில் இருந்து வாராக்கடன்களை நீக்குவது வங்கிகளின் வழக்கமான நடவடிக்கை என்றும், அதேநேரத்தில் வங்கிகளில் கடன் பெற்றவர்களின் முழுமையான விவரங்களை வெளியிட ரிசர்வ் வங்கி அனுமதிக்காது என்றும் சுக்லா குறிப்பிட்டிருந்தார்.

இந்த விளக்கத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. ”வாங்கிய கடன்சுமையைத் திரும்பச் செலுத்த முடியாமல் விவசாயிகள் அழுதுகொண்டும் தற்கொலை செய்துகொண்டும் இருக்கின்றனர். ஆனால், மத்திய அரசு அதனைக் கருத்தில் கொள்ளவே இல்லை” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும், கடன் ரத்து செய்யப்பட்டதற்கும் கடன் வாங்கியோர் பற்றிய விவரங்களை மத்திய அரசு வெளியிடாததற்கும், அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். “எதற்காக இந்த ரகசியம்? இதன் மூலமாக யாரைக் காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது? இது மிகப்பெரிய ஊழல்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, ஏப்ரல் 10ஆம் தேதியன்று மம்தா பானர்ஜி தமிழகத்துக்கு வருகை தருவார் என்றும், அப்போது திமுக தலைவர் மு.கருணாநிதியை நேரில் சந்திப்பார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. மே மாதம் 1,3 மற்றும் 5ஆம் தேதிகளில் மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமென தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் மே 8ஆம் தேதியன்று வெளியாகும்.

உள்ளாட்சித் தேர்தலையொட்டிய அலுவல் இருப்பதால் உடனடியாகத் தமிழகம் செல்லும் எண்ணத்தை மம்தா பானர்ஜி கைவிட்டுள்ளார் என்றும், உள்ளாட்சி தேர்தல் முடிந்தபின்பு மே மாதம் அவர் தமிழகம் வருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சித்தலைவர்களோடு மூன்றாவது அணி குறித்த பேச்ச்சுவார்த்தையை அவர் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *