fதிமுகவுடன் கைகோர்க்கும் சிறுத்தைகள்!

public

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளன.

நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜூலை 20-ஆம் தேதி(நேற்று) திமுக செயல்தளைவர்கள் கூட்டம் நடைபெற்றது, இதில் ஜூலை 27-ஆம் தேதி நீட் தேர்வை எதிர்த்து மனித சங்கிலிப் [போராட்டம்]( https://www.minnambalam.com/k/2017/07/20/1500534477) நடத்தப்போவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து சென்னையில் ஜூலை 21-ஆம் தேதி தெரிவிக்கையில், “நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி திமுக நடத்தும் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கிறது. திமுக அழைப்பு விடுத்த மனித சங்கிலி போராட்டத்தை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடலூரில் நீட் தேர்விற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறேன். மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஜூலை 21-ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர மத்திய அரசு மறுத்துவருகிறது. கடந்த பிப்ரவரியில் அனுப்பப்பட்ட இரண்டு மசோதாக்களையும் கண்டு கொள்ளாமல் மத்திய அரசு திட்டமிட்டே கிடப்பில் போட்டுள்ளது. சமூக நீதிக்கு எதிரான கடும் தாக்குதலை மத்திய பாஜக அரசு தொடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு அக்கறை செலுத்தவில்லை. இதில் பாஜகவிற்கு அரசியல் அழுத்தம் கொடுக்கக் கிடைத்த குடியரசுத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்தி தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பைக் காப்பாற்ற மாநில அரசு தவறிவிட்டது. இதன் விளைவாகத் தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று, மருத்துவர்களாகப் பணிபுரிய விரும்பிய கனவு தகர்க்கப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்கள், பெற்றோர்களின் நலன் காக்க, நீட் நுழைவுத் தேர்விற்கு விதிவிலக்கு கோரும், இரண்டு மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தி, வரும் 27-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் திமுக நடத்துகிற மனித சங்கிலிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும். தமிழக மாணவர்கள் நலன் கருதி நடைபெறும் போராட்டத்தில் கட்சி தோழர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் பங்கேற்று மனித சங்கிலி போராட்டத்தை வெற்றி பெறச் செய்திட வேண்டும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *