மெட்ரோ சிரிஷ் கதாநாயகனாக நடிக்கும் பிஸ்தா படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ளார்.
ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகும் பிஸ்தா படத்தில் மிருதுளா முரளி, அருந்ததி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு தரண் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் 25ஆவது படமாகும். இந்தப் படத்தில் அழகுல ராசாத்தி என்ற பாடலை யுவன் பாடியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள தரண், “பிஸ்தா கிராமப்புறம் சார்ந்த காமெடி திரைப்படம். நாட்டுப்புற மெலடி பாடலாக உருவாகியுள்ள இந்தப் பாடலில் சிரிஷ், மிருதுளா இணைந்து நடனம் ஆடுகின்றனர். இதில் பாடுவதற்காக யுவன் சாரை தொடர்பு கொண்டோம். அவர் உடனடியாக ஒத்துக்கொண்டார்” என்றார்.
தரண் நீண்ட இடைவெளிக்குப் பின் யுவனுடன் இணைந்து பணியாற்றுகிறார். “ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சித்து பிளஸ் 2 படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பாடினார். வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் என்னை யுவனிடம் அறிமுகப்படுத்திவைத்தனர். தற்போது எனது 25ஆவது படத்தில் அவர் பாடியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
யுவனுடன் இணைந்து வைஷாலி என்ற அறிமுக பாடகி பாடியுள்ளார். “வைஷாலிக்கு தனித்துவமான குரல் வளம் உள்ளது. மிருதுளாவுக்கு அவரது குரல் நன்கு பொருந்துகிறது. பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.
இந்தப் படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இடம்பெறுகின்றன. அனைத்துப் பாடல்களும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளன.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!](https://minnambalam.com/k/2019/08/31/26)**
**[நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?](https://minnambalam.com/k/2019/08/29/33)**
**[லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/08/30/63)**
**[“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/08/31/21)**
**[மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?](https://minnambalam.com/k/2019/08/31/12)**
�,”