�
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் டெங்கு கொசுக்களை பரப்பும் வகையில் செயல்பட்டதாக ஒரு திரையரங்கின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இயங்கி வரும் ‘முருகவேல் பேலஸ்’ என்ற திரையரங்கம், டெங்கு கொசுக்களை அழிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சுத்தம், சுகாதாரமற்ற முறையில் இருந்ததன் காரணமாக அந்த திரையரங்கத்தின் “சி’’ உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கொசு ஒழிப்புப் பணிகளை முறையாக செய்யாத குறிஞ்சிப்பாடி சுகாதார ஆய்வாளர் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய புழுக்களை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கைகளை வேல்முருகன் எடுக்காதது ஆய்வின்போது தெரியவந்ததால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
�,”