fஜூன் மின் உற்பத்தி: 97 பில்லியன் யூனிட்!

Published On:

| By Balaji

ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் 97 பில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று கடன் மதிப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளது. மேலும், மின் விநியோக நிறுவனங்களுக்கு குறைவான அளவிலேயே மின்சாரத் தேவையும் ஜூன் மாதத்தில் இருந்துள்ளது.

வட மாநிலங்களில் ஜூன் மாதத்தில் வெப்பநிலை குறைந்து காணப்பட்டதும் மின் தேவை குறைந்து காணப்பட்டதற்கு ஒரு காரணாமாகும். பஞ்சாப் மாநிலத்தில் மின் உற்பத்தி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 39 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல ஹரியானா மாநிலத்திலும் மின் உற்பத்தி 11 சதவிகிதம் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் மின் உற்பத்தி ஜூன் மாதத்தில் குறைந்து தான் உள்ளது. மின் உற்பத்தி குறைவு என்பது பெரும்பாலும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களில் தான் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை கணக்கில் கொண்டால் ‘கோல் இந்தியாவில்’ நிலக்கரி உற்பத்தி 7.2 சதவிகிதம் குறைந்துள்ளது.

ஆனால் ஒட்டுமொத்தமாக கணக்கில் கொண்டால், மாற்று எரிசக்தி மூலம் இந்த ஆண்டு மே மாதத்தில் 27 சதவிகிதம் கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மாற்று எரிசக்தி மூலம் இந்த ஆண்டு மே மாதத்தில் 8.7 பில்லியன் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share