இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற நினைக்காமல், ஜானகி போல தினகரன் ஒதுங்கிவிட வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் எடப்பாடி-பன்னீர் தரப்புக்கு கிடைத்த பிறகு, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்புக்கு கிடைத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தினகரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இதுதொடர்பாக ( நவம்பர் 26) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி ஜானகி ஒதுங்கிக் கொண்டது போல, தினகரனும் இரட்டை இலை சின்னத்தைப் பெற எண்ணாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசித்து ஆர்.கே.நகரில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் ஏற்றுக்கொள்வோம். தேர்தலில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் நிச்சயம் வெற்றிபெறுவர்” என்றார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக சாலையில் அமைக்கப்பட்ட கம்பத்தில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பேசிய அமைச்சர், ஒரு வழிப் பாதையில் வந்த லாரி மோதியதால் தான் கோவையில்இளைஞர் உயிரிழந்தார். இளைஞர் மரணம் குறித்து திமுக எம்எல்ஏ தவறான தகவல் பரப்பி வருகிறார்.லாரி ஓட்டுநருக்கு திமுக எம்எல்ஏ கார்த்திக் உதவியது ஏன்?விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகள் உள்ளன. லாரி டிரைவர் மீது தான் தவறு உள்ளது.அலங்கார வளைவில் மோதி இளைஞர் ரகு உயிரிழந்தது வருத்தத்திற்குரியது. இதை சிலர் தவறாக பரப்பி வருகின்றனர்” என்றார்.
�,”