கடும் வறட்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் அவற்றை வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
தென்னை பயிரிட்ட விவசாயிகள் விளைச்சலுக்கு முன்பாக இவ்வாறு மரங்கள் சேதமடைவதால் வேறு வழியின்றி அவற்றை மரக்கட்டைகளாக விற்பனை செய்யும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 30,000க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக விவசாயிகள் சங்க உறுப்பினரான கே.சிகாமணி, *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். இம்மாவட்டத்தில் தென்னை விதைப்புப் பரப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 80,000 ஹெக்டேரிலிருந்து தற்போது 30,000 ஹெக்டேராகக் குறைந்துள்ளது.
மேச்சேரி, மேட்டூர், ஆத்தூர், தலைவாசல், ஆறகளூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது வறட்சி பாதிப்பால் விவசாயிகள் ஒரு நாளைக்கு 30 தென்னை மரங்கள் வரையில் வெட்டி விற்பனை செய்கின்றனர். இதற்கு ரூ.3,000 வரையில் கிடைக்கிறது. அதாவது மரம் ஒன்றுக்கு ரூ.100 மட்டுமே கிடைக்கிறது. கே.சண்முகவேல் என்ற விவசாயி 80 தென்னை மரங்கள் வைத்துள்ளதாகவும், அவற்றைக் கொண்டு முன்பு ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் ஈட்டியதாகவும் கூறுகிறார். ஆனால் இப்போது அவருக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
120 தென்னை மரங்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரையில் ஈட்டமுடியும் என்று சேலம் மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் இப்போது வறட்சி பாதிப்பால் இழப்புதான் அதிகரித்துள்ளது.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**
**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**
�,”