இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாக வெளியான செய்திகளுக்கு இந்திய ராணுவத் தலைவர் விளக்கமளித்துள்ளார்.
கார்கில் போரின் 20ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று (ஜூலை 13) டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய ராணுவத் தலைவர் பிபின் ராவத் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர், “எதிர்காலத்தில் தொழில்நுட்பமே முக்கியப் பங்கு வகிக்கும். நமது ராணுவ வீரர்களே நமது முதல் சொத்துகளாக இருப்பார்கள். பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் மீண்டும் தனது பிரதிநிதிகளையும், அரசு ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளையும் பயன்படுத்தி சண்டைகளில் ஈடுபட்டு வருகிறது.
நமது எல்லையை பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியுடன் நிற்கிறது. எந்தவித மீறல்களையும் தண்டிக்கும் வகையில் தக்க பதிலடி கொடுக்கப்படும். பல தடைகளையும் தாண்டி நமது பாதுகாப்பு படையினர் வெற்றிபெற்றதில் தேசம் பெருமை கொள்கிறது. யூரி, பாலகோட் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதல்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நமது அரசியல், ராணுவ நிலைப்பாட்டையே காட்டுகிறது. பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது” என்று தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல் இருப்பதாக வெளியாகிய செய்திகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிபின் ராவத், “லடாக் பகுதியில் சீன ஊடுருவல் இல்லை. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீன அதிகாரிகள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவர். அவர்கள் நமது எல்லைக்குள் நுழையாமல் தடுப்போம்.
உள்நாட்டில் சில கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தெம்சோக் பகுதியில் இருக்கும் திபெத்தியர்கள் கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர். அதன் அடிப்படையில், என்ன நடக்கிறது என்பதை பார்க்க சில சீன அதிகாரிகள் வந்தனர். ஆனால், ஊடுருவல் ஏதும் இல்லை. எல்லாம் சீராகத்தான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
�,”