ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றும் விமான ஓட்டிகள் தங்களது சம்பளத்தை வழங்க வேண்டும் அல்லது தங்களது நோட்டீஸ் காலக்கெடுவை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுத் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, நீண்ட காலமாகவே கடுமையான நிதி நெருக்கடியாலும் கடன் சுமையாலும் தவித்து வருகிறது. ஏர் இந்தியாவின் பங்குகள் மற்றும் சொத்துகளை விற்பனை செய்து நிதி திரட்டும் முயற்சியும் தோல்வியில் முடிந்ததால் கடுமையான நெருக்கடியில் ஏர் இந்தியா உள்ளது. இதனால் ஏர் இந்தியா ஊழியர்களின் சம்பளமும் தாமதிக்கப்பட்டு வருகிறது. ஏர் இந்தியாவில் பணியாற்றும் விமான ஓட்டிகளுக்கான சம்பளப் பாக்கி இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் இப்போது குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஒன்று சம்பள பாக்கியை வழங்க வேண்டும் இல்லையென்றால் நிறுவனத்தை விட்டு வெளியேற ஆறு மாதங்கள் கட்டாய காலக்கெடு விதிமுறையை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவன நிர்வாகத்துக்கு இந்திய வணிக விமான ஓட்டிகள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில், ”ஏர் இந்தியாவின் அனைத்து ஊழியர்களுக்கும் 100 சதவிகித சம்பளம் கிடைத்துவிட்டது. ஆனால் விமான ஓட்டிகளுக்கு 70 சதவிகித சம்பளம்கூட கிடைக்கவில்லை. சம்பள பாக்கிக்கான தாமதம் குறித்து எவ்விதத் தகவலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. ஏர் இந்தியாவின் இக்கட்டான சூழல் எங்களுக்குப் புரிகிறது; ஆனால் எங்களது முழு சம்பளத்தையும் வழங்காமல் தாமதிப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதை ஏற்றுக்கொள்ள இயலாது. அதேபோல, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதையும், உரிமங்களுக்கான காப்பீடு தொலைந்தால் அதற்கு வரி வசூலிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
�,”