விராட் கோலியை எவ்வாறு வீழ்த்துவது என மைக்கேல் வாகன் டிப்ஸ் வழங்கியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து இடையே டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவிருக்கிறது. இந்திய அணியை எவ்வாறு வீழ்த்துவது வியூகம் அமைத்துவருகிறது இங்கிலாந்து அணி. அதிலும் குறிப்பாக கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதில் சிறப்பு கவனம் செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், கோலியை எவ்வாறு வீழ்த்துவது என பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோருக்கு டிப்ஸ் வழங்கியிருக்கிறார். அதில், “விராத் கோலி பொதுவாக தனது இடது காலை முன்வைத்து ஆடும்பொழுது சில சமயங்களில் எட்ஜ் ஆகி அவர் அவுட் ஆவார். அப்படி ஆடவைத்து அவரின் விக்கெட்டை எடுக்கவேண்டும். இடது கால் முன்வைத்து அடிக்கடி அவர் ஆடுமாறு பந்துவீச வேண்டும், அப்பொழுதுதான் வலதுபுற ஸ்டம்ப் இருக்கும் இடம் மறந்து ஆடுவார். பந்து இன்ஸ்விங் அவுட் ஸ்விங் ஆகி கணிக்க முடியாமல் எட்ஜ் ஆகி வெளியேறுவார். ஒருநாள் போட்டிகளில் இந்த யுக்தி செயல்படுத்தி வெற்றிகரமாக அமைந்தது” என்றார்.�,