அரசின் தீவிரமான நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக் கடன் ரூ.1 லட்சம் கோடி வரையில் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரித்து வருவது குறித்தும் அதைக் குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜூலை 16ஆம் தேதி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பதிலில், 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ரூ.10,36,187 கோடியாக இருந்த இந்திய வர்த்தக வங்கிகளின் வாராக் கடன்கள் 2019 மார்ச் மாதத்தில் ரூ.9,33,625 கோடியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஆண்டில் மட்டும் ரூ.1,02,562 கோடி வாராக் கடன் குறைந்துள்ளது. வங்கி திவால் சட்டம் உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளால் வாராக் கடன்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக நிர்மலா சீதாராமன் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன், “பொதுத் துறை வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள், வங்கிகளில் மறு மூலதன உதவி, செயற்படா சொத்துகளின் மீட்பு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகளால் வாராக் கடன்கள் குறைந்து வருகின்றன. வங்கி திவால் சட்டத்தில் வங்கி மற்றும் கடன் பெறுபவர்கள் இடையேயான நம்பகத்தன்மை அதிகரித்து வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் நடைபெறும் நிதி மோசடிகளும் கண்காணிக்கப்பட்டு அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
வங்கிகளில் நடைபெறும் நிதி மோசடிகள் குறித்த விவரங்களையும் நிர்மலா சீதாராமன் தனது பதிலில் வெளியிட்டிருந்தார். ரூ.1 லட்சத்துக்கு மேலான நிதி மோசடிகளில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியில் 374 மோசடிகள் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து கோடாக் மகிந்திரா வங்கியில் 338 மோசடிகளும், ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் 273 மோசடிகளும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 273 மோசடிகளும் நடைபெற்றுள்ளன.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”