fகிச்சன் கீர்த்தனா: நெல்லிக்கனிச்சாறு

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் காரணமாகப் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணியாற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஊழியர்கள் சிலர் வீட்டிலிருந்தே அலுவலகப் பணி செய்ய தொடங்கியிருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் காலை வேளையில் இந்த நெல்லிக்கனிச்சாறு செய்து அருந்தினால், உடனடி புத்துணர்ச்சி அளிப்பதுடன் ரத்த சோகையையும் சரி செய்யும். வீட்டில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல் வீட்டிலுள்ள அனைவருக்கும் தேவையான சத்துகள் நெல்லிக்கனிகளில் நிறைந்துள்ளன.

**என்ன தேவை?**

நெல்லிக்காய் – 4

கறிவேப்பிலை – ஒரு கொத்து

புதினா – ஒரு கொத்து

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

தேன் – 2 டீஸ்பூன்

**எப்படிச் செய்வது?**

நெல்லிக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியுடன் சேர்த்து சிறிதளவு நீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். தேவையான அளவு நீர் சேர்த்து வடிகட்டிக்கொள்ளவும். அத்துடன் தேன் சேர்த்துப் பரிமாறவும்.

[நேற்றைய ஸ்பெஷல்: விரதம் இருப்போமா!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/22/3)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share