“பனீரைக் கடையில்தான் வாங்க வேண்டுமா? நாமே செய்ய முடியாதா கீர்த்தனா?” என்ற கேள்விக்குப் பதில் இதோ…
**பனீர் தயாரிக்கும் முறை**
பாலைக் கொதிக்கவைத்து, எலுமிச்சைப் பழத்தையும் தயிரையும் பால் பொங்கிவரும்போது விடவும். பால் திரிந்தவுடன், ஒரு மெல்லிய துணியில் வடிகட்டிய பின் ஒரு பலகையில் துணியோடு வைத்து, மேலே ஒரு பலகையை வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து துண்டாக்கிப் பயன்படுத்தவும்.
சரி, இப்போது தூவல் பனீர் கிரேவி செய்வோமா?
**தேவையானவை:**
வெங்காயம் – 1
தக்காளி – 1
துருவிய பனீர் – 2 கப்
இஞ்சி – பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
காரப்பொடி – 1 தேக்கரண்டி
மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
**செய்முறை:**
வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெயில் வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கி தேவையான உப்பும் காரப்பொடி, மசாலாத்தூள் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
கடைசியில் துருவிய பனீர் சேர்த்து ஒரு புரட்டு புரட்ட வேண்டும். கொத்தமல்லித்தழையைத் தூவவும்.
தூவல் பனீர் கிரேவி சப்பாத்திக்கு ஏற்ற சைடு டிஷ்.
சாண்ட்விச் ஆகவும் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
**கீர்த்தனா சிந்தனைகள்:**
நான் உன்னை விட்டுப்பிரிவதும் இல்லை, விலகுவதும் இல்லை எனும் வாக்கியம் தற்போது, காதலைவிட ஸ்மார்ட்போனுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்.
�,