நாயகியாக மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து கவனம் ஈர்த்துவரும் வரலட்சுமி தற்போது கத்திச் சண்டை கற்றுவருகிறார்.
முக்கிய கதாபாத்திரங்கள் என்றாலும் கதையை தாங்கிப் பிடிக்கும் பிரதான கதாபாத்திரம் என்றாலும் நடிப்பதற்கு சவாலான பாத்திரம் என்றால் உடனடியாக சம்மதித்து படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுகிறார் வரலட்சுமி.
கடந்த ஆண்டு சர்கார், சண்டகோழி 2 ஆகிய படங்களில் நடித்த வரலட்சுமியின் கைவசம் வெல்வட் நகரம், கன்னி ராசி நீயா 2, காட்டேரி, டேனி, கன்னித்தீவு உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்நிலையில் ராஜ பார்வை படத்திலும் நடித்துவருகிறார். ஜே.கே இயக்கும் இந்தப் படத்தில் கத்தியை லாவகமாகச் சுற்றும் காட்சி இடம்பெறுகிறது. அதற்காக நிஜக் கத்தியை அவர் சுற்றிப்பிடிப்பதை வீடியோ பதிவாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“பெண்கள் சண்டையிட முடியாது என்று யார் சொன்னது? நிஜக் கத்தியுடன் ராஜ பார்வை படத்திற்காக பயிற்சி செய்கிறேன். பயிற்சியே முழுமையைத் தரும் அப்போது மிகுந்த மகிழ்ச்சியைப் பெறலாம். இதை படம் பிடித்த சிகை அலங்கார கலைஞர் ஸ்ரீதருக்கு நன்றி” என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் வரலட்சுமி பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.
[கத்தி சுழற்றும் வீடியோ](https://twitter.com/varusarath/status/1104250060156485632)�,