Fஇனி இலவசக் காப்பீடு இல்லை!

public

�ஆன்லைன் டிக்கெட் வாயிலாக ரயிலில் பயணம் செய்வோருக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இலவசப் பயணக் காப்பீடு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் *இந்துஸ்தான் டைம்ஸ்* ஊடகத்திடம் பேசுகையில், இலவசப் பயணக் காப்பீடு வழங்குவதை நிறுத்துவதற்கு ஐஆர்சிடிசி முடிவெடுத்துள்ளதாகவும், காப்பீடு சேவை வேண்டுமென்பவர்கள் அதைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐஆர்சிடிசியின் இணையதளம் மற்றும் மொபைல் செயலி வாயிலாக டிக்கெட் பதிவு செய்யும்போது, இனி பயணக் காப்பீட்டு வசதியைத் தேர்வு செய்வதற்கும், நிராகரிப்பதற்கும் வழிவகை செய்யப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி இலவச பயணக் காப்பீட்டை வழங்கி வருவதாக அவர் கூறினார்.

டெபிட் கார்டு வாயிலாக டிக்கெட் பதிவு செய்வோருக்கான கூடுதல் கட்டணத்துக்கு இந்திய ரயில்வே முன்பு விலக்கு அளித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் காப்பீட்டு வசதியின் வாயிலாக, ரயில் பயணத்தின்போது ஒரு நபர் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வரையிலும், உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ.7.5 லட்சம் வரையிலும், காயம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரையிலும், பிரேத இடமாற்றத்துக்கு ரூ.10,000 வரையிலும் வழங்கப்படுகிறது.

பயணக் காப்பீட்டுக்கு கட்டணம் வசூலிப்பதற்கான உத்தரவு அடுத்த சில நாட்களில் பிறப்பிக்கப்படும். எனினும், கட்டணத் தொகை எவ்வளவு என்பது இன்னும் வெளியாகவில்லை.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *