fஇடைத்தேர்தல் வெற்றி: திமுக – 3, அதிமுக – 3

public

ஏற்கனவே 2 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற நிலையில் திருப்போரூர் தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சில தொகுதிகளில் நிறைவுற்ற நிலையில், வெற்றி மற்றும் முன்னிலை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் மகாராஜன், அதிமுக வேட்பாளர் லோகிராஜன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் அதிமுக, திமுக மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றன. மகாராஜன் 161 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ஆம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வில்வநாதன் 37,088 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளர் ஜோதிராமலிங்க ராஜாவைக் காட்டிலும் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். குடியாத்தம் தொகுதியில் திமுகவின் எஸ்.காத்தவராயன், அதிமுக வேட்பாளர் மூர்த்தியை விட 27,841 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திருப்போரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் இதயவர்மன், அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்தை விட 20,377 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன், திமுக வேட்பாளர் ஜெயக்குமாரை விட 29,790 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி, திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியனை விட 21,166 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். சோளிங்கர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத்து, திமுக வேட்பாளர் அசோகனை விட 16,056 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி முகத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *