தொடர் விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க தென் மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
அதன்படி, வருகிற 18ஆம் தேதி (நாளை) முதல் 20ஆம் தேதி வரை ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸில் (வ.எண்.22662) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், வருகிற 18ஆம் தேதி (நாளை) நாகர்கோவில் – தாம்பரம் ரயிலில் (வ.எண்.22658) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், இன்று (ஏப்ரல் 17) மதுரை – சென்னை சென்ட்ரல் டுரண்டோ ரெயிலில் (வ.எண்.20601) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும் இணைக்கப்படுகிறது.
வருகிற 21ஆம் தேதி வரை திருவனந்தபுரம் – சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வ.எண்.16724), மதுரை- திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் (வ.எண்.16344), குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) ஆகியவற்றில் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. அத்துடன் குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.16128) வருகிற 21ஆம் தேதி வரை 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
**ராஜ்**
.