இன்று முதல் பாண்டியன், வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் மாற்றம்

Published On:

| By admin

பாண்டியன், வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் மாற்றம் இன்று (ஏப்ரல் 14) முதல் செய்யப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வேக்கு உட்பட்ட மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு சில ரயில் நிலையங்களில் ரயில்கள் வந்து சேரும் மற்றும் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) முதல் மதுரை – சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12638) மதுரையிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக இரவு 9.35 மணிக்குப் புறப்படும். மேலும் இந்த ரயில் கொடைரோடு, அம்பாத்துரை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 9.55, 10.10 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக இரவு 10, 10.15 மணிக்குப் புறப்பட்டு அதிகாலை 5.05 மணிக்கு பதிலாக அதிகாலை 5.15 மணிக்கு சென்னை சென்றடையும்.
சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12661) திண்டுக்கல், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 3.10, 5.15, 5.35, 5.42, 5.58, காலை 6.12, 6.35, 6.48, 7.05, 7.35 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 3.05, 5.10, 5.30, 5.37, 5.53, காலை 6.07, 6.30, 6.43, 7.00, 7.30 மணிக்குப் புறப்படும். ஆனால், வழக்கம் போல காலை 8.15 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
மதுரை – சென்னை வைகை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12636) மதுரையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக காலை 7.10 மணிக்குப் புறப்படும். மேலும் இந்த ரயில் சோழவந்தான் ரயில் நிலையத்திலிருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக காலை 7.30 மணிக்கு புறப்படும்.
மதுரை – பழனி சிறப்பு ரெயில் (வ.எண்.06480) மதுரையிலிருந்து காலை 7.20 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக காலை 7.25 மணிக்குப் புறப்படும். மேலும் இந்த ரயில் கூடல் நகர், சமயநல்லூர், சோழவந்தான் ரயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 7.30, 7.38, 7.48 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக காலை 7.35, 7.44, 7.52 மணிக்குப் புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

**-ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share