}விஜய் படத்தில் ஆண்ட்ரியாவுக்கு என்ன கேரக்டர்?

Published On:

| By Balaji

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் ரிலீஸாவதற்கு முன்பே அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை ‘தளபதி 64’ என்று அழைத்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் என நட்சத்திரப் பட்டாளம் அதிகம் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் இணைந்திருப்பவர் ஆண்ட்ரியா.

டெல்லியில் நடைபெற்று வந்த தளபதி 64 படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியிருக்கிறது படக்குழு. அங்கு ஷூட்டிங்கை முடித்துவிட்டு, இரண்டாம்கட்ட ஷூட்டிங்குக்குத் தேதி கொடுத்துவிட்டார் விஜய். விஜய்யின் தேதிகளும், அவருக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் தேதிகளும் ஒத்துப்போகும் இந்த இரண்டாம்கட்ட படப்பிடிப்பில்தான் அவர்களுக்கிடையேயான காட்சிகள் ஷூட் செய்யப்பட இருக்கின்றன.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிப்பதால், ஆண்ட்ரியாவிடம் லோகேஷ் கனகராஜ் கதை சொல்வதற்கான வாய்ப்பு இல்லை என்று திரையுலகத்தில் பேசப்பட்டது. ஆனால், ஆண்ட்ரியாவிடம் சொல்லப்பட்ட கதையில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ரோல் விஜய் சேதுபதியுடன் நடிப்பதுதான். மிக வலிமையான வில்லன் கேரக்டராக விஜய் சேதுபதியின் ரோல் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அந்த கேரக்டருக்குச் சற்றும் சளைக்காமல் சமமாக நடிக்கக்கூடிய நடிகையைத் தேடியபோதுதான் ஆண்ட்ரியா கிடைத்திருக்கிறார். கதை சொல்லி முடித்து, ஆண்ட்ரியாவுக்கும் பிடித்துவிட்டதாகத் தெரிகிறது. கூடிய விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel