பெண்ணுக்காக இரு ஆண்கள் சண்டை போட்டது பற்றி நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் ஒரு பெண்புலிக்காக இரு ஆண் புலிகள் சண்டையிட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ரான்தாம்போர் தேசிய உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்குப் புலிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த புலிகளுக்கு எண்களுடன் கூடிய பெயரும் வைக்கப்படுகிறது. இங்கு t57 மற்றும் t58 ஆகிய இரு சகோதர புலிகள் உள்ளன. இதில் t57 புலியின் பெயர் சின்சு. t58 புலியின் பெயர் ராக்கி. தற்போது ராக்கியும், சின்சுவும் ஆக்ரோஷத்துடன் சண்டையிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவில் இரு புலிகள் சண்டையிட்டு கொண்டிருக்கும் நிலையில் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாவது புலி தெறித்து ஓடுவது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்திய வனத் துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், புலிகளுக்குள் இப்படித்தான் சண்டை நடக்கும். மிருகத்தனம் மற்றும் வன்முறை காட்சிகளை நீங்களே பாருங்கள். பெண்புலிக்காக ஆக்ரோஷத்துடன் சண்டையிடுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
இதற்குப் பலர் இரு சகோதர புலிகளில் யார் வென்றது என கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு t57 வென்றது. இதில் யாரும் பலத்த காயமடையவில்லை” என்று தெரிவித்துள்ளார். நூர் என்ற பெயரை கொண்ட t39 பெண் புலிக்காக இரு ஆண் புலிகளும் சண்டையிட்டுள்ளன.�,”