ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை அதிகரிப்பு!

public

பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் காட்டுத் தீ மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் பற்றிய கவலை அதிகரித்துள்ளது. அந்த நாடுகளில் தற்பொழுது அதிகரித்து வரும் வெப்ப நிலையே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் வடமேற்கு சியரா டி லா குலேப்ரா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 22,240 ஏக்கர் நிலம் அழிந்து போனது. இன்று ஸ்பெயினில் 42 டிகிரி வரை வெப்பம் வாட்டி வதைக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய ஸ்பெயினில் கடுமையாக காட்டு தீ பரவியதால் கிட்டத்தட்ட 3000 பேர் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரான்ஸ் நாட்டிலும் வெப்பநிலை மிக அதிகரித்து காணப்படுவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று 30 டிகிரி வெப்பம் பதிவான நிலையில், 1947ஆம் ஆண்டுக்கு பிறகு நேற்று தான் அதிக வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அந்நாட்டின் தலைநகர் பாரிஸில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில், குறைந்த அளவு மாசு வெளிப்படுத்தும் வாகனங்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நிலவும் வளிமண்டலத்தில் கரியமில வாயுக்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், புவி வெப்பமடைதலை தூண்டி காலநிலை மாற்றத்தின் விளைவாக, இந்த ஆண்டு அங்கு வெப்ப அலைகள் முன்னதாகவே தொடங்கிவிட்டன.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *