குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Published On:

| By Balaji

c

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 6,491 இல் இருந்து 9,398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கிராம நிர்வாக அலுவலர் (விஏஒ) – 397, ஜூனியர் அசிஸ்டெண்ட்(non security) – 2688, ஜூனியர் அசிஸ்டெண்ட் (security)- 104 பில் கலெக்டர், கிரேடு – I -34, பீல்டு சர்வேயர் – 509, டிராப்ட்மேன்- 74, தட்டச்சர் – 1901 மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் -784 என 6 491 குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் 16 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

5575 மையங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டு, நவம்பர் 12ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 72 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 6,491 இல் இருந்து 9,398 ஆக பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share