aநீதிபதி மகன் உட்பட 8 பேருக்கு கொரோனா!

public

W

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனின் மகன் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படாமல் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று குறைவதை தொடர்ந்து, தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதனால், கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டன. பெரும்பாலான நீதிபதிகள் நேரடியாக விசாரிக்க ஒப்புதல் அளித்தனர்.

அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் வழக்குகளை நேரடியாக விசாரித்து வந்தார். இவர் பசுமை வழிச் சாலையில் உள்ள நீதிபதிகள், அமைச்சர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

நீதிபதிக்காக ஒதுக்கப்பட்ட நீதிமன்ற பணியாளரின் கணவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை தெரிவிக்காமல் அந்த பணியாளர் தொடர்ந்து பணிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நீதிபதி வைத்தியநாதனின் மகன், சகோதரி உட்பட அலுவலகத்தில் உள்ள வாகன ஓட்டுநர், நீதிமன்ற ஊழியர், இரண்டு பொதுப்பணித் துறை ஊழியர்கள், ஒரு காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதியுடன் தொடர்புடைய 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம், நீதிபதிகள், அமைச்சர்கள் குடியிருக்கும் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பேட்டை பகுதியில் செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *