இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரியில் தலைவர்கள் எல்லாம் மேடை போட்டு பிரச்சாரம் செய்துகொண்டிருந்தாலும், திரைமறைவில் நடக்கும் சாதிப் பிரசாரமே வலுவாக இருக்கிறது.
டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றோர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்கு வர மறுத்துவிட்டனர். வெளியே ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவர்களுக்கு ‘உரிய’ மரியாதை அதிமுக தரப்பில் இருந்து அளிக்கப்படவில்லை என்பதே இதற்கு பின்னணி என்கிறார்கள் தொகுதியில் இருக்கும் அதிமுக பிரமுகர்கள்.
தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் முழுதாக அதிமுகவுக்கு கிடைக்குமா என்ற கேள்விக்குறி நிலவுகிற சூழலில், தொகுதியில் கணிசமாக இருக்கும் நாடார் இன மக்கள் காங்கிரஸ் பக்கம் சாயக் கூடும் என்ற தகவலும் அதிமுகவுக்கு கிடைத்திருக்கிறது. இதை எப்படி சமாளிப்பது என்று சாதி ரீதியான வியூகங்கள் அதிமுக தரப்பில் தொடர்ந்து வகுக்கப்பட்டு வருகின்றன. .
டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் அதிமுகவை பகிரங்கமாக எதிர்த்துவிட்டதாலும், டிடிவி தினகரன் பெயரளவில் கூட போட்டியிடாததாலும் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக தனக்கு விழும் என்று நம்புகிறது அதிமுக. மேலும், பனங்காட்டு மக்கள் படை வேட்பாளர் ஹரிநாடார் காங்கிரஸுக்கு விழக்கூடிய வாக்குகளை கணிசமாக பிரித்துவிடுவார் என்பதும் அதிமுகவின் நம்பிக்கை. இதோடு சேர்த்து தேவேந்திர குல வேளாளர் இன லோக்கல் பிரமுகர்களை சரிக்கட்டி வாக்குகளை பர்ச்சேஸ் செய்துவிடலாம் என்றும் அதிமுகவுக்கு திட்டமிருக்கிறது.
தனக்கு கிடைத்த ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் காங்கிரஸ் ஓட்டில் சேதாரத்தை உண்டு பண்ணும் நோக்கத்தோடு பனங்காட்டு மக்கள் கட்சியை களமிறக்கிவிட்டதே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்த்த வேலை என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டுகிறார்கள்.
�,