x
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்.
சீனாவில் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. புடியான் பகுதியில் கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி வரும் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று காலை தொடங்கிய போட்டியில், ஹரியானவைச் சேர்ந்த இந்திய வீராங்கனை மனு பக்கர், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்டார். அதில், 244.7 புள்ளிகளைப் பெற்ற அவர் இறுதியில் தங்கப்பதக்கத்தை வென்றார்.
இதுபோன்று கடலூர் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 250.8 புள்ளிகள் பெற்றுத் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். 250.7 புள்ளிகள் பெற்று சீன வீராங்கனை லின் யிங்-ஷின் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அதுபோன்று, 229 புள்ளிகள் பெற்று ருமேனியாவின் லாரா-ஜார்ஜெட்டா கோமன் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். .
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிச் சுற்றில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து இளவேனில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.�,