Yசுற்றாவது சூழலாவது – ஜெ.ஜெயரஞ்சன்

Published On:

| By Balaji

நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசுகிறார்.

இந்த நிலையில் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்து ஜெயரஞ்சன் இன்று (ஆகஸ்ட் 12) விரிவாகப் பேசினார். காற்று, மழை, தண்ணீர், வானம், பூமி ஆகியவற்றுடன் இயைந்து வாழ்வதுதான் மனித வாழ்க்கையின் நியதி எனவும், மனித சமூகம் வளர வளர இயற்கை வளங்களை பெருமளவில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

தொழிலில் ஈடுபடும்போது இயற்கை வளங்களை அதன் வளம் குன்றாமல் எடுக்கத் தெரிய வேண்டும். அப்படி இல்லை எனில் பல விஷயங்கள் அழிந்துபோகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு தொழில் என்பது சுற்றுச் சூழலை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை வகைப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு என்ற ஜெயரஞ்சன், அதன் வரலாறுகளை விவரித்தார்.

**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share