நிஜமும் நினைப்பும்… : ஜெ.ஜெயரஞ்சன்

Published On:

| By Balaji

நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.

இன்றைய காணொளியில், நடுத்தர வகுப்புகள் குறித்துப் பேசும் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், “இந்தியாவில் நடுத்தர வகுப்புகள் அதிகளவு இருக்கின்றன அல்லது நடுத்தர வகுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று வணிக பத்திரிகைகளில் திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியா வறுமையான நாடாக இருந்தது. ஆனால் 20, 30 ஆண்டுகளில், மக்களுக்கு வருமானம் எல்லாம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

மிகப் பெரும்பான்மை வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட நாங்கள் நடுத்தர வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் தான் என்று சொல்கிறார்கள். இது சரிதானா என்பது தான் நம் முன் இருக்கும் கேள்வி. இது தொடர்பாக PEW ஆராய்ச்சி குறித்து ஜெயரஞ்சன் விவரித்துள்ளார். மேலும், இந்த வீடியோவில், குறைந்த வருமானம், நடுத்தர வகுப்புகள், எதன் அடிப்படையில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வகைப்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும் பேசியுள்ளார்.

*முழுக் காணொலியையும் கீழே காணலாம்*

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share