பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் துயரங்கள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் நாள்தோறும் பேசி வருகிறார். 100 ஆவது நாளான நேற்றைய தினம் புதிய பொருளாதார பாதைக்கு செல்வது குறித்து விவரித்திருந்தார்.
இதுவரை ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இன்று (ஜூலை 21) உரையை ஆரம்பித்த ஜெயரஞ்சன், பொருளாதாரம், சமூகம் சார்ந்த விஷயங்களில் பல அறிவுப்பூர்வமான கேள்விகளை மக்கள் மனதில் தனது உரை எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தை வெளிப்படுத்தினார்.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது குறித்து விவரித்த ஜெயரஞ்சன், மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியபோது வடமாநிலங்களில் ஏற்பட்ட கலவரங்களையும் சுட்டிக்காட்டினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாகவும் பேசினார்.
இதனை செயல்படுத்த மத்திய அரசுக்கு ஆர்வமில்லை என்று சாடியவர், “அதே சமயம் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு வேகவேகமாக கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது” என்று கூறினார். இட ஒதுக்கீடு, சமூக நீதி ஆகியவை குறித்து விரிவாக விளக்கினார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”