M
அரசு கட்டடங்களில் உள்ள அரசியல் விளம்பரங்களை நீக்குமாறு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகரத்தின் ஆணையருமான கோ.பிரகாஷ் இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள், கட்-அவுட்கள், பேனர்கள் உள்ளிட்டவை தேர்தல் தேதி அறிவிப்பிலிருந்து 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும். அதுபோன்று, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம், தொலைத்தொடர்பு நிலையங்கள், உள்ளாட்சி அமைப்பு கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் 48 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும்.
தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள், உள்ளூர் சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு உட்பட்டு ஏதேனும் இருந்தால், அதை 72 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
�,