eகோலி இடத்தில் நான் இருந்தால்: கங்குலி

public

இந்திய அணியின் நான்காவது வீரர் வரிசைக்கு கே.எல்.ராகுல்தான் பொருத்தமானவர் என்று கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 என கைப்பற்றிய இந்தியா, ஒருநாள் தொடரை 1-2 என இழந்தது. கடைசி ஒருநாள் போட்டியில் நல்ல ஃபார்மில் இருந்த கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் ஆகியோர் நீக்கப்பட்டதற்கு முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கங்குலி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். சிறந்த பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகுல், அஜிங்க்ய ரஹானே ஆகியோருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை என்றும் அடிக்கடி மிடில் ஆர்டரை மாற்றி சோதிப்பது முன்கள பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய கங்குலி, இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி ஆகியோர் சர்வதேச அணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். ஆனால் இந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சில நேரங்களில் விரைவில் ஆட்டம் இழந்து ரன் எடுக்க முடியாமல் போகும் போது அடுத்தடுத்து களம் இறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படும். இது அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். இதனால் மிடில் ஆர்டர் வரிசையைப் பலப்படுத்துவது அவசியம். இந்த வரிசையை அடிக்கடி மாற்றிச் சோதிப்பது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை அதிகரிக்கும்.

ராகுல், ரஹானே ஆகியோரைப் போதுமான அளவு பயன்படுத்தவில்லை. 4ஆவது வீரர் வரிசைக்கு ராகுல்தான் பொருத்தமானவர் அவரைக் கண்டிப்பாக இந்த வரிசையில் களமிறக்க வேண்டும். நானாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு ராகுலை 4ஆவது இடத்தில் பேட் செய்ய வைத்திருப்பேன். மான்செஸ்டர் போட்டியில் சதம் அடித்த ராகுலை கடைசி ஒருநாள் போட்டியில் நீக்கியது ஏனென்று தெரியவில்லை. இதுபோன்ற சிறந்த வீரர்களை உங்களால் உருவாக்க முடியாது. 5ஆவது வரிசையில் ரஹானேவையும், 6ஆவது வரிசைக்கு தினேஷ் கார்த்திக் அல்லது தோனியையும், 7ஆவது வீரராக ஹர்த்திக் பாண்டியாவையும் களமிறக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மகேந்திர சிங் தோனி குறித்துப் பேசிய அவர், “இந்திய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் தோனி. ஆனால் தற்போது பேட்டிங்கில் சற்றுத் திணறிவருகிறார். அவர் தனது திறமையை நிரூபித்து இன்னும் 1 ஆண்டு அணியில் நீடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *