Eஹெச்.ராஜாவுக்கு நோட்டீஸ்!

Published On:

| By Balaji

நீதிமன்றத்தை அவதூறாக விமர்சித்த விவகாரத்தில் ஹெச்.ராஜா விசாரணைக்கு ஆஜராகுமாறு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பாஜக தேசிய செயலாளர், ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர அனுமதி கோரி தந்தை பெரியார் திராவிட கழக அமைப்பாளர் கண்ணதாசன் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அரசு தலைமை வழக்கறிஞர் அக்டோபர் 3ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு ஹெச்.ராஜாவுக்கு இன்று (செப்டம்பர் 18) நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை திருமயம் பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஹெச்.ராஜா நீதிமன்றத்தையும், காவல் துறையையும் அவதூறாகப் பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து திருமயம் போலீசார் ஹெச். ராஜா மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரைப் புண்படுத்தும் விதமாகப் பேசுதல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே நீதிமன்றம் பற்றிய ஹெச்.ராஜாவின் பேச்சு தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிடி செல்வம், நிர்மல்குமார் அமர்வு தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து அக்டோபர் 22 ஆம் தேதிக்குள் ராஜா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அக்டோபர் 3 ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞர், ஹெச்.ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share