ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று பட்டியலிடப்பட்டிருந்தது. இன்று நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் இவ்வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி சசிதரன் தெரிவித்தார். மேலும், வழக்கின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் சசிதரன், ஆஷா அமர்வு தெரிவித்தது. வழக்கின் அடுத்த விசாரணையை யார் விசாரிப்பது என்பது தொடர்பான விவரங்களை தலைமை நீதிபதி இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஸ்டெர்லைட் வழக்கு எந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்பதை இன்று தலைமை நீதிபதி அறிவிப்பார். அதன்பிறகு அந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் என நம்புகிறேன். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நாளை அரக்கோணத்திலிருந்து வரிசையாக விழுப்புரம், புதுச்சேரியை சேர்ந்த காரைக்கால், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கிலோமீட்டர் தொலைவிற்கு பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் என நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட இயக்கத்தின் சார்பாக மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகளும், கழகத்தினரும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை தந்திருக்கிறார்.
இப்போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. இப்போராட்டத்தில் மதிமுக பெருமளவில் கலந்துகொள்ளும் என்று அறிவித்திருக்கிறேன். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் நான் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறேன். தமிழக காவிரி டெல்டா பகுதியை முழுமையாக அழிப்பதோடு, இப்போது இருக்கும் குடிநீர் பிரச்சினையை விட கொடூரமாக 19 மாவட்டங்கள் குடிநீர் இல்லாமல் வாடும் நிலைமையையும், 25 லட்சம் ஏக்கர் பாசனப் பகுதி அடியோடு நாசமாக்கும் பேராபத்தும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படும். இத்திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டுமென்று துடித்துக்கொண்டு இருக்கும் மத்திய அரசு தமிழகத்துக்கு தொடர் துரோகங்களை செய்து வருகிறது” என்று கூறினார்.
**
மேலும் படிக்க
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்](https://minnambalam.com/k/2019/06/11/21)
**
**
[எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?](https://minnambalam.com/k/2019/06/11/20)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”