eவீட்டுக்கே மதுவா? மறுக்கும் முதல்வர்!

Published On:

| By Balaji

“வீட்டுக்கே மதுவை டோர் டெலிவரி செய்வது குறித்து எந்தத் திட்டமுமில்லை” என்று மஹாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிகளவில் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இந்த நிலையில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து மதுவை விநியோகம் செய்யும் திட்டம் ஒன்றை கொண்டுவர மஹாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு பேட்டியளித்திருந்த அம்மாநில கலால் துறை அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே, “இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே விபத்துக்களை குறைப்பதுதான். இனிமேல் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து மது விநியோகம் செய்யப்படும். இதன்மூலம் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து எங்களுக்கு எதிர்ப்புகள் வெள்ளமெனப் பெருகியதாக குறிப்பிட்டுள்ள கலால் துறை அதிகாரி ஒருவர், “இத்திட்டம் மோசமானதாக உள்ளது. இது தவறான ஒரு முன்னுதாரணமாகிவிடும். சட்டவிரோதமான மதுபான நுகர்வுக்கு வழிவகுக்கும்” என்று மக்கள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மஹராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “வீட்டுக்கே மதுவை டோர் டெலிவர் செய்யும் திட்டம் குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை. எதிர்காலத்திலும் கொண்டுவரப்படாது” என்று உறுதியளித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment