�
போட்டி நிறுவனங்கள் தங்களின் செல்போன் விலைகளை மாற்றியமைத்துவரும் நிலையில், விவோ நிறுவனமும் தமது குறிப்பிட்ட மாடல் செல்போன் ஒன்றின் விலையை மாற்றியமைத்துள்ளது .
தீபாவளி விற்பனை முடிந்த நிலையில் பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் தமது செல்போன் விலைகளை மாற்றி அமைத்துவருகின்றன. அந்தவகையில் முன்னதாக ரெட்மி போன்களின் சில மாடல்களின் விலையை அதிகரித்தது முன்னணி நிறுவனமான சியோமி. அதுபோல ரியல்மீ நிறுவனமும் தனது சி 1 மாடல் செல்போன் விலையை அதிகரித்தது.
இந்நிலையில் விவோ y 83 ப்ரோ எனும் மாடலின் விலையையும் மாற்றியமைத்துள்ளது பிரபல நிறுவனமான விவோ. ஆனால் பிற நிறுவனங்களைப்போல விலையை அதிகரிக்கவில்லை. மாறாக விலையைக் குறைத்துள்ளது. அந்த வகையில் விவோ y 83 எனும் மாடலின் நவீன வடிவமாக வெளியிடப்பட்ட இந்த விவோ y 83 ப்ரோ முதலில் 15,990 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.
தற்போது 1000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 14,990க்கு விற்பனை செய்வது என முடிவெடுத்துள்ளது விவோ. விலையைக் குறைத்துள்ளதால் இந்த மாடலின் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரியோ 8.1 அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளம், 6.22 இன்ச் திரை ஆகிய வசதிகள் இதில் உள்ளன.�,