எழுத்து வடிவிலான வாடகை ஒப்பந்தம் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்தும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று (ஜூன் 7) சென்னையில் இந்த சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் இதில் கலந்துகொண்டார்.
தமிழக அரசின் புதிய சட்டத்தின்படி வாடகை அதிகாரியாக வருவாய் கோட்ட அலுவலர் அல்லது தனித் துணை ஆட்சியர் இருப்பார் என்றும், அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் எழுத்து மூலமாகக் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பேசிய கிருஷ்ணன் தெரிவித்தார்.
“2019 பிப்ரவரி 22க்கு முன்பாக எழுதப்படாத ஒப்பந்தங்களையும் எழுத்து மூலமாகப் பதிவு செய்வதற்கு உரிய கால அவகாசம் 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்கு முன்பாக நான்கு மாதங்களுக்குரிய வாடகை ஒப்பந்தங்களைப் பதிவு செய்ய வேண்டும். எழுத்து வடிவிலான வாடகை ஒப்பந்தமானது சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர், வாடகைதாரரால் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று கிருஷ்ணன் அந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களிடம் கூறினார்.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
**
[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)
**
**
[12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி](https://minnambalam.com/k/2019/06/07/16)
**
**
[மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!](https://minnambalam.com/k/2019/06/07/53)
**
�,”