eமும்பையில் விருது வென்ற தமிழ்ப் படம்!

Published On:

| By Balaji

ஜியோ MAMI மும்பை திரைப்பட விழாவில் இயக்குநர் வஸந்த் எஸ். சாய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் விருது பெற்றுள்ளது.

கேளடி கண்மணி, ஆசை, ரிதம், நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப் பார், சத்தம் போடாதே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குநர் வசந்த் எஸ்.சாய். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் ஒரே அம்சமுள்ள மூன்று சிறுகதைகளை தேர்ந்தெடுத்து முழு நீள படமாக உருவாக்கியுள்ளார் வசந்த். இதில் பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாஸ்டர் அம்ரீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ‘Wide Angle’ ரவிஷங்கர், என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இப்படம் ஜியோ MAMI மும்பை திரைப்பட விழாவில் பாலின சமத்துவ (Gender Equality Award) விருதைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் மும்பை திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 20வது மும்பை திரைப்படவிழா மும்பையில், அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி நேற்று (நவம்பர்1) முடிவடைந்தது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share