இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மேற்கொள்ளும் முடிவுகளும், முதல்மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பின்னணியும் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில், சூரத்தில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் துறவறம் மேற்கொள்ள முடிவுசெய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 27 ஆம் தேதி, குஜராத் மேல்நிலை கல்வி வாரியம் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில், குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்தவர் வர்ஷில் ஷா (17) 99.9% மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். பொதுவாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல், போன்ற படிப்புகளை தேர்வு செய்கின்றனர். ஆனால், வர்ஷில் ஷா இன்று(ஜூன்,8) துறவறம் மேற்கொள்ளவுள்ளதாக அவருடைய மாமா நயன்பாய் சுதாரி தெரிவித்துள்ளார்.
வர்ஷில் ஷாவின் தாயார் அமிபன் ஷா. தந்தை ஜிகார்பாய் வருமான வரி அதிகாரியாக உள்ளார். சகோதரி ஜெய்னினி. வர்ஷில் ஷாவின் பெற்றோர் குழந்தைகளை மிகவும் எளிமையாக வளர்த்துள்ளனர். தங்கள் மகன் தேர்வுசெய்த பாதை மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளனர். வர்ஷில் ஷா குடும்பம் ஜீவத்யா ஜெயின்கொள்கையைப் பின்பற்றுகிறது.
அவர் குடும்பத்தில் மின்சாரம் பயன்படுத்தப்படுவதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்யும்போது பல நீர்வாழ் உயிரினங்கள் கொல்லப்படுவதாகக் கருதுகின்றனர். அது ஜெயின் மதத்துக்குஎதிரானது என நம்புகின்றனர். எனவே அவர் வீட்டில் தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதன பெட்டியைப் பயன்படுத்துவதில்லை. இரவு நேரங்களில், குறிப்பாக படிக்கும்போது மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
கடின உழைப்பை விட அமைதியான மனம் மட்டுமே அதிக மதிப்பெண்களைப் பெற்று தரும் என வர்ஷில் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வர்ஷில் கூறுகையில், சிறுவயது முதல் ஜெயின் மதத்தைச் சேர்ந்த ஸ்ரீ கல்யாண்ரத்னா விஜய் ஜிமகாராஜின் (32)போதனைகளைக் கேட்டு வந்தேன். இதன் காரணமாக நான் அவரையே குருவாகஏற்றுக்கொண்டேன். அவரின் போதனைகள் எனக்கு மிகுந்த மன அமைதியைக் கொடுத்தது. இதனால், அவரின் தீட்சைப் பெற்று ஜெயின் மதத்தில் இணையவுள்ளேன். இந்த முடிவைக் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன்பே எடுத்துவிட்டேன். தேர்வு முடியும் வரை காத்திருந்தேன். வாழ்க்கையை அமைதியாகவும்மற்றவர்களைக் காயப்படுத்தாமல் மகிழ்ச்சியாகவும் வாழ விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஜின் தீட்சைப் பெற்று வரும் 8ம் தேதி இன்று முதல் ஜெயின் மதத்தில் இணைந்து ஸ்ரீ கல்யாண்ரத்னாவிஜய் ஜி மகாராஜின் போதனைகளை வர்ஷில் ஷா போதிக்க உள்ளார்.
கேரளாவில் 1200க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலாவது இடத்தைப் பிடித்த மாணவி ரஃப்சினா ஏழ்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
அதே போல், பீகார் பிளஸ்-2 தேர்வில் முறைகேடு செய்து முதலிடம் பிடித்த மாணவர் கனேஷ் குமார் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார்.�,