eமீண்டும் நிகழுமா கெளதம் மேனன் மேஜிக்?

Published On:

| By Balaji

9

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற மறக்கமுடியாத படங்களைக் கொடுத்தவர் கெளதம் மேனன். 2010ஆம் ஆண்டு வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்குப் பின் தொடர் சரிவுகளை சந்தித்து வந்தார் இவர். ஒரே மாதிரியான கதைக்களங்கள், எடுத்து முடித்த படங்கள் வெளியாவதில் காலதாமதம், தயாரித்த படங்களில் சிக்கல், பொருளாதார பிரச்சனை என பலமுனை போராட்டங்களை சந்தித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் எனை நோக்கிப் பாயும் தோட்டா, விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் ஆகிய இரு படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கினார் கெளதம். இப்படங்களில் எனை நோக்கிப் பாயும் தோட்டா ஜுலை 26ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துருவ நட்சத்திரம் படத்தின் நிலை பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டெர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க வருண் கதாநாயகனாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம் கெளதம் மேனன் இழந்த தன் மேஜிக்கை மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டெர்நேஷனல் தயாரிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோமாளி படம் வெளியாகவுள்ளது. ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share