eமீண்டும் துவங்கிய லட்சுமி மேனன் படம்!

public

கடந்த ஒரு வருடமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த லட்சுமி மேனன் திரைப்படத்தை மீண்டும் துவக்கியுள்ளனர்.

அறிமுக இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில், பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் யங் மங் சங். பரபரப்பான நடிகராக வலம்வந்த பிரபுதேவா கொஞ்ச கால இடைவெளியில் இயக்குநர் அவதாரம் எடுத்து, இப்போது மீண்டும் நடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இப்படத்தில் தங்கர்பச்சான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். ஆர்.ஜே.பாலாஜி, பாகுபலி பிரபாகர் கலக்கேயா, சித்ரா லட்சுமணன், அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படம் பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக ஒருசில பிரச்சினைகளால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இப்போது மீண்டும் இப்படத்தின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. தற்போது படக்குழுவினர் கோபிச்செட்டிபாளையத்தில் முகாமிட்டுள்ளனர். அங்கு அனைத்து முன்னணி கதாபாத்திரங்களுக்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுவருகின்றன. அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் சீனாவிலும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

குருதேவ் ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவஸ்ரீ சீனிவாசன் தயாரிக்கிறார். இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் அறிமுகப்படமான உரிமை கீதம் உள்பட பல படங்களைத் தயாரித்தவர் இவர். பிறகு நான் கடவுள், பாஸ் (எ) பாஸ்கரன், நிமிர்ந்து நில் ஆகிய படங்களையும் தயாரித்தார். மேலும் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் அர்ஜுன் பணியாற்றியிருக்கிறார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *