இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியைப் பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது மும்பை மாலில் அரங்கேறியுள்ள ஒரு நிகழ்ச்சி.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து சதமடித்து வியக்க வைத்துள்ள கோலி ஐந்தாவது போட்டியிலும் சதம் அடிப்பாரா எனும் ஆவல் எழுந்துள்ளது. இந்த நிலையில் கோலிக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக தற்போது ஒரு நிகழ்ச்சி மும்பையில் நடந்துள்ளது.
அதாவது, மும்பை நேவி பகுதியின் நெருலில் அமைந்துள்ளது சீவுட் க்ராண்டு சென்ட்ரல் எனும் மால். அந்த மாலில் விராட் கோலியின் உருவத்தைப் பிரதிபலிக்கும் விதமாக உலகிலேயே மிகப் பெரிய களிமண் மொசைக்கைத் தற்போது உருவாக்கியுள்ளனர். இந்தக் களிமண் மொசைக் அப்பாசாஹேப் ஷேவேல் என்பவரின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது.
கோலிக்கு ரசிகராக இருப்பதை போலவே வண்ண வேலைப்பாடுகளுடனும் கலைநயத்துடனும் அமைக்கப்பட்டுள்ள இதைப் பார்த்து இதை வடிவமைத்தவருக்கும் பலர் தற்போது ரசிகர்களாக மாறியுள்ளனர்.
இதை யாரும் சிதைத்து விடக் கூடாது எனும் நோக்கில் பொதுமக்கள் இதன் அருகில் வரமுடியாதபடி சுற்றிலும் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.�,”