இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று 4ஆம் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்களை சேர்த்திருந்தது. தொடக்க வீரர் ரான்ஷவ் மட்டும் களத்தில் இருந்தார். இன்றைய போட்டி தொடங்கிய முதல் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் ரான்ஷவ் நிதானமாக விளையாடி போட்டியை டிரா செய்ய முயற்சித்து வந்தனர். இருப்பினும், இஷாந்த் சர்மா வேகத்தில் ரான்ஷவ் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அதற்கு அடுத்த ஓவர் ஜடேஜா பந்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் (21) ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி திணறியது.
அதன்பின்னர் வந்த மார்ஸ் மற்றும் ஹான்ட்கம்ப் நிதானமாக விளையாடி வருகின்றனர். தற்போது உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களைச் சேர்த்துள்ளது.�,