|
வரும் 2020 ஆம் ஆண்டு முதல் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர மத்திய இடைநிலை கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது.
பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதைத் தவிர்க்கவும், மாணவர்களின் பகுத்தாய்வு திறனைச் சோதிக்கும் வகையிலும் தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படும். நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலான கேள்விகளும் ,1 முதல் 5 மதிப்பிலான கேள்விகள் மட்டுமே அதிகளவில் கேட்கப்படும்.
தொழில் முறை பாடங்களுக்கு பிப்ரவரி மாதமே தேர்வு நடத்தவும், மற்ற முக்கிய பாடங்களுக்கு மார்ச் மாதம் தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் அனைத்தும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், விடைத் தாள்களை திருத்தி மதிப்பிடக் கூடுதல் கால அவகாசம் கிடைக்கும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே தேர்வு முடிவுகளை வெளியிட முடியும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த பரிந்துரைகள் மீது ஆலோசனை நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
�,