eபிகில்: முடிந்தது வெளிநாட்டு பிசினஸ்!

public

விஜய் நடித்த பிகில் படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை யூனைட்டட் இந்தியா எக்ஸ்போர்டர்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளது.

கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் விஜய்யின் புதிய படம் பிகில். தெறி, மெர்சல் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அட்லி விஜய்யை இயக்கும் மூன்றாவது படம் இது. மெர்சல் பட பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் விஜய்யுடன் இப்படத்தில் இணைகிறார். மெர்சலில் வெளியான ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் வைரல் ஹிட்டாகி அப்படத்தின் வெற்றிக்கு பங்களித்தது. பிகில் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இருக்குமென கூறப்படுகிறது. மேலும் வில்லு படத்திற்கு பிறகு நயன்தாரா விஜய்யுடன் ஜோடியாக நடிக்கும் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான பிகில் படத்தின் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், பிகில் படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை யூனைட்டட் இந்தியா எக்ஸ்போர்டர்ஸ் நிறுவனம் எக்ஸ் ஜென் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது. கடந்த 25 வருடங்களாக முன்னணியில் இருக்கும் வெளிநாட்டு திரைப்பட விநியோக நிறுவனமான இது வேலையில்லா பட்டதாரி, மாரி, டோரா, காக்கிச் சட்டை, வேதாளம், நானும் ரௌடி தான், ஜில்லா, இறைவி போன்ற படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**[திமுக வேட்பாளர் தேர்வில் முறைகேடு: ஓஎம்ஜியில் களையெடுத்த ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/25/57)**

**[மோடிக்கு எதிரான கருத்தை வெளியிட்டால் உயிருக்கு ஆபத்து: தேர்தல் ஆணையம்](https://minnambalam.com/k/2019/06/25/34)**

**[’நான் விஸ்வரூபம் எடுத்தால்…’ – தினகரனைத் தாளிக்கும் தங்கம்](https://minnambalam.com/k/2019/06/25/31)**

**[டிஜிட்டல் திண்ணை: தங்கத்தை தூக்கிய தங்கமணி- பழனியப்பனை தூக்கும் வேலுமணி](https://minnambalam.com/k/2019/06/24/71)**

**[நீட் கோச்சிங் சென்டர்களின் வருமானம் இவ்வளவா?](https://minnambalam.com/k/2019/06/25/23)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0