பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிகாரை தவிர மற்ற மாநிலங்களில் இருந்து விலகுவதாக ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடந்த சில ஆண்டுகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் பாஜக கூட்டணியில் தான் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்றிருந்தது. இதில் பிகாரில் 40 தொகுதிகளில் 16 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும், 17 இடங்களில் பாஜகவும், 6 இடங்களில் லோக் ஜன சக்தியும், ஒரு இடத்தில் காங்கிரஸும் வெற்றி பெற்றது. இந்த சூழலில் மத்திய அமைச்சரவையில் ஒரே ஒரு இடம் தர முன் வந்ததற்காக, அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்று நிதிஷ் குமார் மறுத்து விட்டார். இதனால் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள சில மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகித் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது. அக்கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டம் இன்று (ஜூன் 9) பிகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது.
இதில் பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் மற்றும் மூத்த தலைவர்களான கி.சி.தியாகி, பஷிஸ்டா நரேன் சிங், பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக்கூட்டத்தில், அடுத்து நடைபெறவுள்ள ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**
[பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!](https://minnambalam.com/k/2019/06/09/40)
**
**
[ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!](https://minnambalam.com/k/2019/06/09/22)
**
**
[டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!](https://minnambalam.com/k/2019/06/08/73)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
�,”