eபணக்காரர் பட்டியல்: அம்பானி ஆதிக்கம்!

Published On:

| By Balaji

உலகப் பணக்காரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 13ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

உலக நாடுகளில் அதிகம் செல்வம் படைத்த பணக்காரர்களுக்கான பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சொத்து மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து இந்தப் பட்டியல் தினசரி அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. இதில் அமேசான் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார். எல்.வி.ஹெச்.எம். நிறுவனத்தின் பெர்னார்டு அர்னால்ட் (108 பில்லியன் டாலர்) இரண்டாம் இடத்திலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் (107 பில்லியன் டாலர்) மூன்றாம் இடத்திலும், வாரன் பஃபெட் (83.9 பில்லியன் டாலர்) நான்காம் இடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் (79.5 பில்லியன் டாலர்) ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றனர்.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 51.8 பில்லியன் டாலர் சொத்துடன் பட்டியலில் 13ஆவது இடத்தில் இருக்கிறார். இந்தியாவில் முகேஷ் அம்பானியைத் தவிர 17 இந்தியர்கள் புளூம்பெர்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அம்பானியைத் தொடர்ந்து அசிம் பிரம்ஜி (20.5 பில்லியன் டாலர்) 48ஆவது இடத்திலும், ஷிவ் நாடார் (14.5 பில்லியன் டாலர்) 92ஆவது இடத்திலும், உதய் கோடாக் (13.8 பில்லியன் டாலர்) 96ஆவது இடத்திலும் இருக்கின்றனர். மற்ற இந்தியர்களான லக்ஷ்மி மிட்டல் 112ஆவது இடத்திலும், கவுதம் அதானி 151ஆவது இடத்திலும், ராதாகிருஷ்ணன் தமணி 193ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

**[ வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/07/17/51)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share