Eநிலக்கரி உற்பத்தி உயர்வு!

Published On:

| By Balaji

நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியா 10.4 சதவிகிதம் கூடுதலான நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

2017ஆம் ஆண்டின் ஏப்ரல் – அக்டோபர் மாதங்களில் மொத்தம் 335.2 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை மட்டுமே உற்பத்தி செய்திருந்த இந்தியா, இந்த ஆண்டின் ஏப்ரல் – அக்டோபரில் மொத்தம் 370.3 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. இது 10.4 சதவிகிதம் கூடுதலாகும். இதில் கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி மட்டும் 10.1 சதவிகிதம் உயர்ந்துள்ளது. முந்தைய 2017-18 நிதியாண்டில் இந்தியா மொத்தம் 676.48 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்திருந்தது. இது 2013-14 உற்பத்தி அளவை (565.77 மில்லியன் டன்) விட 110.71 மில்லியன் டன் அதிகமாகும்.

இந்த ஆண்டில் நவம்பர் 12ஆம் தேதி வரையில் கோல் இந்தியா நிறுவனம் மட்டும் மொத்தம் 326.63 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை உற்பத்தி செய்திருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரித் தேவை இந்த நிதியாண்டில் 991.35 மில்லியன் டன்னாக இருக்கும் என்று நிதி ஆயோக் மதிப்பிட்டுள்ளது. இதில் இறக்குமதியும் அடங்கும். ஒட்டுமொத்த நிலக்கரித் தேவையில் மின்னுற்பத்தி ஆலைகளுக்கான பங்கு 760.66 மில்லியன் டன்னாகவும், இதர துறைகளுக்கான பங்கு 230.69 மில்லியன் டன்னாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share