ஊரே குடிக்க தண்ணியில்லாம குடத்தை தூக்கிட்டு குழாய் அடியில நிக்குது. தல என்ன தில்லா நடமாடும் சரக்கு கடை கேட்ருக்குன்னு பார்த்தீங்களா? நம்மளும் லைம் லைட்டுக்கு வருவோம்னு பேசுனாரா, இல்ல உண்மையிலேயே தீவிரமா யோசிச்சு ஆய்வு பண்ணி இந்த முடிவெடுத்து வந்து பேசுனாரான்னு தெரியல. சரி இன்னொரு பிஜிலி ரமேஷ் வந்துட்டாருன்னு எல்லாரும் டிவிட்டர்ல கடையை விரிச்சுட்டாங்க, விதவிதமாக ரக ரகமா அவருக்கு புதுசா பேர் வச்சுகிட்டு இருக்காங்க. சரக்கு வாங்க கஷ்டமா இருக்குன்னு இவர் பேச டீ, காபி எல்லாம் குடிக்காதீங்க உடம்புக்கு நல்லது இல்லைன்னு இன்னைக்கு சிவக்குமார் பேசிருக்காரு. இதைப் பத்தி நியூஸ் வந்ததும் அதுக்கு கீழ அவரோட பசங்க காபி தூள் விளம்பரத்துல நடிச்ச போட்டோவை தூக்கிப்போட்டு போட்டோவுலயே கமெண்ட் அடிச்சுகிட்டு இருக்காங்க. அப்டேட்டை பாருங்க. ஒரு டீ அடிச்சுட்டு வாரேன்.
**பேச்சுலர்**
இன்னும் லோனே வரல கல்யாணமே நடக்குமா இல்லையானு தெரில,
அதுக்குள்ள ஒருத்தன் நைட் சில்லிபுரோட்டோ போடலாம்னு சொல்றான்,
ஒருத்தன் மைசூர் போண்டா கேக்குறான்…
**கோழியின் கிறுக்கல்!!**
குழந்தை வைத்திருக்கும் கதை புத்தகம், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதை சொல்கிறது!!!
**மித்ரன் **
தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் கொண்டு வரவேண்டும் – தனியரசு எம்.எல்.ஏ #
குடிமகன்களின் சார்பாக சட்டசபையில் பேசியதால் இனி குடி”யரசு என அன்போடு அழைக்கபடுவாய்..
**amudu**
அப்பாக்கள், “சாக்லேட் பேக்டரி ஓனராகவும், ஐஸ்கிரீம் கம்பெனி ஓனராகவும் இருந்திருக்கலாம்” என்பது, குழந்தைகளின் ஆசைகளில் ஒன்று.
**அன்புடன் கதிர்**
தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் கொண்டு வரவேண்டும் – தனியரசு எம்.எல்.ஏ #
ஊத்தி கொடுக்க MLA க்கள் ஒத்துழைக்க வேண்டும்னு சேர்த்து சொல்லியிருக்கலாம் !!
**A.P.Perumal.**
வீட்டுக்கு வரும் சொந்தக்கார்களுக்காக கூடுதலாக பால் வாங்கும் நாம் ..
அவர்களிடம் கூடுதல் அன்பை செலுத்த தவறுகிறோம்.
**mohanram.ko**
பந்தியில் எந்த வேலையும் செய்யாமல், அந்த இலைக்கு சாம்பார் ஊத்து, இவருக்கு பாயாசம் ஊத்து என்று குரல் கொடுப்பவர், ஏனோ மேனேஜரை நினைவுபடுத்துகிறார்
**உள்ளூராட்டக்காரன்**
இயல்பில் இருப்பதை விட நெருக்கமாக காட்டுவது ‘ரியர் வியூவ்’ கண்ணாடி மட்டுமல்ல, ரியல் எஸ்டேட் வியாபாரிகளும் தான்
**mohanram.ko**
வேலை கிடைக்காதவர்களின் ஞாயிற்றுக்கிழமைகளை விட, வேலைக்கு செல்பவர்களின் ஞாயிற்றுக்கிழமை கொடுமையானது
**A.P.Perumal.**
எதற்கெல்லாமோ மாற்று கண்டு பிடித்த விஞ்ஞானிகளால்
குடிநீருக்கு மாற்று கண்டு பிடிக்க முடியவில்லையே?
**ஜோக்கர்…**
மனைவியிடம் சண்டை போடுவதில் ஒன்றும் பிரச்சினையில்லை,
சமாதானப்படுத்துவதில் உள்ள “பொருளாதார சிக்கல்”தான் கணவரை அமைதியாய் கடந்து விட செய்கிறது..!!!
**பர்வீன் யூனுஸ்**
சரக்கு அடிக்கும் குடிமகனுக்கு அதில் கலக்க வாட்டர் பாக்கெட் கிடைக்கும் வரை, நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று தான் சொல்வான்.
**உள்ளூராட்டக்காரன்**
கிருஷ்ணா நதி நீர்
வீராணம் குழாய் நீர்
ஜோலார்பேட்டை ரயில் நீர்
நான் பல ஊரு தண்ணி குடிச்சவன்னு பெருமையா சொல்லிக்கலாம் சென்னைவாசி
**கோழியின் கிறுக்கல்!!**
சனிக்கிழமை மதியமே ஞாயிற்றுக்கிழமை தொடங்கி விடுகிறது!!
**பழைய சோறு **
மகன் எடுத்து கொடுத்த புடவையில் ஒவ்வொரு முறையும் விலையை தேடி ஏமார்ந்து போகிறாள் அம்மா…!
**எனக்கொரு டவுட்டு **
தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடம் எது என்று குரூப் 4 எக்ஸாம்ல கேட்குற அளவிற்கு ஜோலார்பேட்டை பிரபலமாகிவிடும் என அவதானிக்கிறேன்..!
**S.K.Soundhararajan**
8 வழிச்சாலை வந்தா எங்களுக்கு நல்ல பேரு கிடைக்கும்! அதான் எதிர்க்குறாங்க.-பழனிசாமி. #
கூடவே உங்க சம்மந்திக்கு பேரு கிடைக்கும்லா.!
**amudu**
நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு, “ஓய்வூதிய திட்டம்” என்று பெயர்.
**Newton**
15 வருடங்கள் முன்பு கோமாவில் விழுந்து, இன்று எழுந்த ஒருவன், ஃபெடரர் விளையாடுவதை டிவியில் காண நேர்ந்தால், தான் கோமாவில் இருந்தோம் என்பதை உணர மாட்டான்.
**பால் பாண்டி**
இவுனுக அத்தி வரதரையும் கும்புட வரானுங்க மாட்டு கறியும் திங்குறானுங்க ஒரே கன்பீசிங்கா இருக்கேனு இன்னேரம் மண்டைய உருட்டிகிட்டு இருப்பானுங்களே
**ச ப் பா ணி**
இனி ரியல் எஸ்டேட் விற்கிறவங்க “ஜோலார்பேட்டைக்கு அருகில்” னு இடம் விற்பாங்க
-லாக் ஆஃப்
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
�,”