Eதொடங்கியது குற்றால சீசன்!

Published On:

| By Balaji

கடந்த வாரம் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை பொழிய ஆரம்பித்த நிலையில், நேற்று குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நீர் விழத் துவங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய தமிழகத்திலுள்ள சில மாவட்டங்களும் அப்போது மழை பெறும். அதேநேரத்தில், தமிழகத்திலுள்ள சில அருவிகளில் நீர் வரத்து தொடங்கும். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நீர் விழும். அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் நீர் பெருக்கெடுக்கும்போது, அவ்வட்டாரத்திலுள்ள சாலைகள் அனைத்தும் வாகனங்களாலும் மக்களாலும் நிறைக்கப்படும். கடந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் குற்றால அருவிகளில் நீர் கொட்டியது.

இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் குற்றால சீசன் தொடங்காததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த சனிக்கிழமையன்று கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாகவே குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் சாரல் மழை பெய்தவாறு இருந்தது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 10) குற்றாலத்தில் சீசன் ஆரம்பமானது. நேற்று காலையில் ஐந்தருவியில் சிறிய அளவில் நீர் விழத் தொடங்கியது. பழைய குற்றாலம் அருவியிலும் நீர் வரத்து பெருக்கெடுத்துள்ளது. மெயின் அருவியில் இன்று முதல் நீர் வரத்து இருக்குமென்று மக்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

சீசன் தொடங்கியதையடுத்து, வரும் நாட்களில் குற்றாலம் வட்டாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**

மேலும் படிக்க

**

**

[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)

**

**

[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)

**

**

[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)

**

**

[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share