eதீபாவளி: பேருந்து முன்பதிவு தொடக்கம்!

Published On:

| By Balaji

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட அரசு விரைவுப் பேருந்துகளில் வெளியூர் செல்பவர்கள், இன்றும் நாளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**பேருந்து நிலவரம்**

அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் சுமார் 1000 பேருந்துகள் உள்ளன. இதுதவிர திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், கும்பகோணம் போன்ற போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன இந்த பேருந்துகளில் நீண்ட தூரம் செல்லக் கூடிய அரசு விரைவுப் பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. தற்போது 2000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, அவற்றுக்கு ‘பாடி’ கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு 300 புதிய பேருந்துகள் விடப்பட்டன. இதில், அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்திற்கு 40 பேருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முதன்முதலாக, படுக்கை வசதியுடன் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சொகுசு, அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளும் விடப்பட்டுள்ளன. இதனால் தற்போது பயணிகள் கூட்டம் பேருந்துகளில் அதிகரித்து வருகிறது.

**தீபாவளி முன்பதிவு**

நவம்பர் மாதம் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாட, சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் கடைசி நேரப் பயணத்துக்காகப் பேருந்துகளை நாடுகின்றனர். தற்போது இதற்கான முன்பதிவு இன்றும் (செப்டம்பர் 4) நாளையும் (செப்டம்பர் 5) நடைபெறுகிறது. இதனைப் பயன்படுத்த விரும்புபவர்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு நேரடியாகச் சென்று முன்பதிவு செய்யலாம். தென் மாவட்டங்களுக்குச் செல்லக் கூடியவர்கள் கடைசி நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ஏதுவாக அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

**போக்குவரத்து அதிகாரியின் பேட்டி**

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“அரசு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம். 300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும்125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. சென்னையில் கோயம்பேடு, தியாகராயநகர், திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட 19 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. இதுதவிர www.tn.stcin என்ற இணைய தளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்” என்று தெரிவித்தார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share