eதிருமணமாகாத மகள் ஜீவனாம்சம் கோரலாம்!

public

பெற்றோர்கள் விவகாரத்து பெற்றாலோ, பிரிந்து வாழ்ந்தாலோ திருமணமாகாத மகள் 18 வயதை அடைந்தபோதும் கூட தனது தந்தையிடம் பராமரிப்பு உரிமையை கோரலாம் என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு பெண் தனது மகள் சார்பாக பராமரிப்பு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என நீதிபதி பார்தி டாங்ரே கூறியுள்ளார்.

குடும்ப நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எங்கள் இருவருக்கும் 1988 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. 1997 ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குழந்தைகள் மைனராக இருக்கும் வரை என் கணவர் ஜீவனாம்சம் வழங்கி வந்தார். எனது மகள் 18 வயதை அடைந்தவுடன் ஜீவனாம்சம் வழங்கமாட்டேன் என கூறினார். அதனால், குழந்தைகளுக்கு பராமரிப்பு செலவுக்கான தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

Description: https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

இந்த மனுவை விசாரித்த குடும்ப நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125 (1) (ஆ) பிரிவின் கீழ், சிறு குழந்தைகளுக்கு மட்டுமே பராமரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து, அந்த பெண் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.அதில், எனது மகள் 18 வயதை அடைந்திருந்தாலும், இன்னும் அவர் படிப்பதால் பொருளாதார ரீதியாக என்னை சார்ந்து தான் இருக்கிறாள். அதுமட்டுமில்லாமல், எனது இரண்டு மகன்களும் உதவி செய்யக் கூடிய நிலையில் இல்லை. ஒருவர் படிப்பிற்காக வாங்கிய லோனை திருப்பி செலுத்திக் கொண்டிருக்கிறார். மற்றொருவர் வேலைக்கே செல்லவில்லை.

அதனால், எனது கணவர் மாதந்தோறும் ரூ. 25,000 பராமரிப்பு கொடுத்து வந்தார். தற்போது, எனது மகளுக்காக 15,000 ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி பார்தி டாங்ரே, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் கடந்த தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, திருமணமாகாத 18 வயதை அடைந்த மகள்(சுயாதீனமற்றவராக இருந்தால்) கூட தந்தையிடம் இருந்து பராமரிப்பு செலவை பெற கோரிக்கை விடலாம் என உத்தரவிட்டார். மேலும், மனுதாரரின் கூற்றை மறுபரிசீலனை செய்ய குடும்ப நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதிக்கு உத்தரவிட்டார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0